பொட்டு அம்மான் உயிருடன்? புலனாய்வுத்துறை முன்னாள் போராளிகள் கூறுவது என்ன?

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உற்பட பல முக்கியஸ்தர்கள் தற்போது ஓரிடத்தில் மறைந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டுவரும் கதை தொடர்பாக, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவினர்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறையின் முன்னாள் உறுப்பினர்கள் சார்பாக கதிர்காமத்தம்பி அறிவழகன் என்பர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,

‘தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் காப்பரனாகவும், தடையகற்றியாகவும் உச்சப்பணிசெய்து வாழ்ந்த விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பானர் திரு.ச.பொட்டு அம்மான் அவர்களின் வீரச்சாவும் எமது துறைப் போராளிகளால் உறுதிப்படுத்தப்பட்டது என்பதை மக்களுக்கு இத்தால் அறியத்தருகின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புலனாய்வுத்துறையின் முன்னாள் உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை