ரஷ்ய விமானத் தாக்குதல்களுக்கு மேற்குலக நாடுகள் உரிமம் வழங்குகிறார்கள்-உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு!

உக்ரைன் மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்க தொடர்ந்து மறுப்பதன் மூலம் ரஷ்ய விமானத் தாக்குதல்களுக்கு மேற்குலக நாடுகள் உரிமம் வழங்குகிறார்கள் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய ஸெலன்ஸ்கி, ‘ரஷ்யப் படையெடுப்பின் தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மேற்கு நாடுகளின் தலைவர்கள் அறிவார்கள். இந்நிலையில், உக்ரைன் மீது விமானங்கள் பறக்கத் தடைவிதிக்க மறுப்பதன் மூலம் நகரங்கள், மாநகரங்கள் மீது குண்டு வீச புடினுக்கு அவர்கள் உரிமம் வழங்குகிறார்கள்’ என்று குற்றம்சாட்டினார்.மேலும், தலைநகர் கீவ்வில் இருந்து உரையாற்றிய போது, ‘புதிய தாக்குதல்களும், இழப்புகளும் தவிர்க்கமுடியாதவை என்று தெரிந்தும், உக்ரைன் வான்பரப்பை மூட நேட்டோ வேண்டுமென்றே மறுக்கிறது’ என கூறினார்.உக்ரைன் ‘வான் பறப்பில் விமானம் பறக்கத் தடை’ அறிவிப்பு வெளியிடப்பட்டால், அதை மீறிப் பறக்கும் ரஷ்யப் போர் விமானங்களை நேட்டோ ஜெட் விமானங்கள் சுட வேண்டி வரும். இது உடனடியாக மூன்றாம் உலகப் போர் வித்திடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.