இலங்கையில் களைகட்டிய வெசாக் கொண்டாட்டங்கள் : மஹிந்தவின் தன்சலில் வீரவன்சவின் மனைவி


கடந்த நான்கு வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் வெசாக் தின கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்றன.

2019 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், 2020 ஆம், 2021 ஆம் ஆண்டுகளில் கொவிட் 19 பெருந்தொற்று மற்றும் 2022 ஆம் ஆண்டில் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி என்பன இப்பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட இடமளிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முதல் நாட்டின் அனைத்து பாகங்களிலும் வெசாக் தின கொண்டாட்டங்கள் மற்றும் தான நிகழ்வுகள் சிப்பாக இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைய கொழும்பு, கண்டி, நுவரெலியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலும் வெசாக் கொண்டாட்டங்கள் கலை கட்டியிருந்தன.

நாட்டின் பல பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த வெளிச்சக்கூடுகள், தோரணங்கள் மற்றும் கொடியலங்காரங்களை மக்கள் ஆர்வமாக பார்வையிட்டதுடன் தமது மகிழ்ச்சியை இவ்வாறு வெளிப்படுத்தினர்.

இதேNவை நாட்டின் பல பகுதியில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்து கிறிஸ்த்தவ மற்றும் முஸ்லிம் மக்களும் தான நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை வெசாக் பண்டிகையை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ விஜேராம இல்லத்திற்கு வெளியில் கடலை தன்சல் ஒன்றை நேற்று (05)  நடத்தினார்.


இந்நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன்  முரண்பட்டு, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவன்ச, தன்சலில் பங்கேற்றிருந்தார்.