தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஈரானிய உச்சத் தலைவர் அலி கமேனிக்கு மிக நெருக்கமானவருமான அலி ஷத்மானியைக் கொன்றதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
“ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஆட்சியின் உயர் ராணுவத் தளபதியுமான அலி ஷத்மானி, துல்லியமான உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து, மத்திய தெஹ்ரானில் தாக்குதலில் கொல்லப்பட்டார்” என்று குறிப்பிட்டுள்ளது.
ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதி அலி ஷத்மானி ஈரானிய ஆயுதப் படைகளின் அவசரகால கட்டளைத் தளபதியாகப் பணியாற்றினார்.
அவர் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் ஈரானிய ராணுவம் இரண்டிற்கும் கட்டளை தளபதியாக இருந்தார்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை ஈரானில் இருந்து ஏவப்பட்ட புதிய ஏவுகணைகளைக் கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது.

எனினும், ஈரானிய ஊடகங்களில் ஷட்மானியின் மரணம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
உயரடுக்கு IRGC படைக்கும் வழக்கமான ஈரானிய இராணுவத்திற்கும் இடையிலான கூட்டு இராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிடும் தலைமையகத்தின் தலைவராக அலி ஷட்மானி கடமையாற்றி வந்தார்.
இதற்கு முன்னர் அதே பதவியை வகித்த கோலமாலி ரஷீத், கடந்த வாரம் நடந்த இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து அலி ஷட்மானி அந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

--