நாங்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கிறோம்! இலங்கையின் அபாய அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திற்கும் (ஐ.எம்.எப்) எங்கள் பன்னாட்டு சகாக்களுக்கும், எங்கள் இரு தரப்பு நண்பர்களுக்கும் நாங்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கிறோம் என்பதை தெரிவித்துள்ளோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களின் நன்மைக்கும், உலக பொருளாதாரத்தின் நன்மைக்கும் இது அவசரமான விடயம் எனவும் அவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவிக்கு அப்பால் அடுத்த வருடம் இலங்கை சர்வதேச அமைப்புகளிடம் இருந்து 5 பில்லியன் டொலர் கடன்களை எதிர்பார்க்கிறது. அரச சொத்துக்களை மறுசீரமைப்பிற்கு உட்படுத்துவதன் மூலம் 3 பில்லியன் டொலர் வரை திரட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.