நடுவீதியில் பொலிஸாருடன் முரண்பட்ட பெண்: பரவும் காணொளி தொடர்பில் விளக்கம்

உடுகம்பொல சதிபொல அருகே போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு பெண் ஒருவர் இடையூறு விளைவிப்பது தொடர்பான காணொளியொன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

Video Link  - https://youtube.com/shorts/yQxdacwPJ0U?si=W8p74Ndal0Aei4oR


இந்த காணொளி தொடர்பான உண்மைகளை பொலிஸ் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது.

போக்குவரத்து விதிமீறலுக்காக பெண் ஒருவர் ஓட்டிச்சென்ற காரை நிறுத்துமாறு பொலிஸார் அறிவித்த நிலையில் ​​காரை நிறுத்தாமல் சென்று பொலிஸாரின் கடமைகளுக்கு குறித்த பெண் இடையுறு ஏற்படுத்தியுள்ளார்.

இதன்பின்னர், போக்குவரத்து அதிகாரிகள் காரை துரத்திச்சென்று உடுகம்பொல பகுதியில் நிறுத்தி சோதனை செய்தபோது, ​​அவர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவம் 31.10.2025 கம்பஹா பொலிஸ் பிரிவில் உள்ள கொட்டகொட-உடுகம்பொல சாலையில் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலை

இதன்போது குறித்த பெண் தான் மூத்த பொலிஸ் அதிகாரி ரன்மல் கொடிதுவாக்குவின் சகோதரி என்றும், தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும், தன்னிடம் அனைத்து ஆவணங்களும் இருப்பதாக பொலிஸாரிடம் கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டு இன்று, 01.11.2025 அன்று கம்பஹா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் சகோதரி என்று சந்தேகிக்கப்படும் பெண் கூறியது முற்றிலும் பொய் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஆபத்தான வாகனம் ஓட்டுதல், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், பொலிஸ் சிக்னல்களை புறக்கணித்தல், குற்றவியல் பலாத்காரம் மற்றும் வேறொரு நபரைப் போல ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.