அணு ஆயுத தடுப்புப் படைகளை எச்சரிக்கையில் இருக்குமாறு விளாடிமிர் புடின் உத்தரவு!

அணு ஆயுதங்களை உள்ளடக்கிய அதன் தடுப்புப் படைகளை சிறப்பு எச்சரிக்கையில் இருக்குமாறு, ரஷ்யாவின் இராணுவத்திற்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.உக்ரைன் மீதான அவரது படையெடுப்புக்கு பரவலான கண்டனங்களுக்கு மத்தியில், மேற்கு நாடுகளின் ஆக்கிரமிப்பு அறிக்கைகள் இதற்குக் காரணம் என்று அவர் பாதுகாப்புத் தலைவர்களிடம் கூறினார்.இந்த அறிவிப்பு ரஷ்யா ஆயுதங்களைப் பயன்படுத்த விரும்புகிறது என்று அர்த்தமல்ல எனவும் அவர் தெரிவித்தார்.அமெரிக்கா உடனடியாக புடினின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி கண்டனம் வெளியிட்டுள்ளது.கடந்த வாரம், உக்ரைனில் எங்களுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிப்பவர்கள், உங்கள் வரலாற்றில் நீங்கள் கண்டிராத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று புடின் எச்சரித்திருந்தார்.அந்த வார்த்தைகள் மேற்குலகம் தனது வழியில் நின்றால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தலைக் குறிப்பதாக பரவலாக விளக்கப்பட்டது. இந்தநிலையில் புடினின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.