திடீரென விலகும் விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் விஷ்ணு விஷால். தற்போது கட்ட குஸ்தி என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் தெலுங்கில் மட்டி குஸ்தி என்ற பெயரில் உருவாகிறது. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா தனது ஆர்டி டீம் வொர்க்ஸ் சார்பாக தயாரிக்கிறார்.இந்தப் படத்தை செல்ல அய்யாவு இயக்குகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் விடியோ போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தான் சமூக வலைதளங்களிலிரு்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”வாழ்க்கையில் அவ்வப்போது இடைவேளை எடுத்துக்கொள்வது முக்கியம். சமூக வலைதளங்களிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன். விரைவில் உங்களை சந்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.