விஷால் யுவனை பற்றி கூறியது

விஷால் நடிப்பில் தற்போது வீரமே வாகை சூடும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து. சரவணன் இயக்கியயுள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை டம்பில் ஹயாத்ரி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, பாபுராஜ் நடிக்கவுள்ளார். நடிகர் விஷால் தனது சொந்த தயரிப்பு நிறுவனமாக விஷால் பிலிம் பேக்டரி மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். ஜனவரி 26 ஆம் திகதி திரையில் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷால் கூறியது நான் எப்போதும் புதுமுக இயக்குனர்கள் படத்தில் நடிக்கும் போது யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பார் என்று சொல்லிவிடுவேன்.இதற்காக யுவனிடம் அனுமதியெல்லாம் கேட்ட மாட்டேன். ஏன் என்றால் அவர் என்னுடைய நெருங்கிய நண்பர் என்கிறார் விஷால்.