ஜனவரி 26 இல் விஷாலின் வீரமே வாகை சூடும் ரிலீஸ்

எனிமி படத்தை அடுத்து து. சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் வீரமே வாகை சூடும். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பொங்கலுக்கு திரைக்கு வரும் என செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் வீரமே வாகை சூடும் படம் வருகின்ற ஜனவரி 26 ஆம் திகதி திரைக்கு வருவதாக அறிவித்து இருக்கிறார் விஷால். அதோடு பெண்களின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்கள் கண்டிப்பாக வெற்றிபெறும்.அந்த வகையில் இந்த படம் இரண்டு நாயகிகளுக்கும் கூடுதலான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் சாமானிய மனிதனின் கோவம் தான் இந்த  வீரமே வாகை சூடும் படத்தின் கதை என்றும் தெரிவித்துள்ளார்.