விருமன் பிரஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் கார்த்திக் தற்போது முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ் , சூரி, ஆர்.கே சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் , செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் தேன்மொழி என்னும் கதாப்பாத்திரத்தில் தைரியம் மிகுந்த மதுரப்பெண்ணாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இப்படத்தை சூர்யா ,ஜோதிகா இணைந்து 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.இதனை ஏப்ரல் இல் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.