விக்ரம் திரைப்படம் ரிலீஸ் திகதி அறிவிப்பு!

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகியப் படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். அவரது இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் தொடங்கப்பட்ட திரைப்படம் விக்ரம். மூன்று முன்னணி கதாநாயகர்கள் ஒன்றிணைந்து நடிப்பதால் விக்ரம் படத்திற்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்தார். கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக விக்ரம் படப்பிடிப்பு தடை பட்டது. அதன் பிறகு கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, இதனாலும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.பின்னர் வெளியூரில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளை சென்னையில் செட் அமைத்து படமாக்கினர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய காரணத்தாலும், விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் சமீபத்தில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகினார் கமல்.இந்நிலையில் விக்ரம் திரைப்படம் ஜூன் 3-ம் திகதி  திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.