கே.ஜி.எப் பாணியில் உருவாகும் விக்ரம் 61 ஆவது படம்

மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களின் நடித்துள்ள விக்ரம் அடுத்த படியாக பா.ரஞ்ஜித் இயக்கும் 61 ஆவது படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி முடித்துள்ள பா.ரஞ்ஜித். இந்த மாத இறுதியில் விக்ரம் நடிக்கும் படத்தை தொடங்குகின்றார். மேலும் விக்ரம் நடிக்கும் படத்தை கன்னடத்தில் உருவான கேஜிஎப் படத்தை போன்று கோலார் தங்க சுரங்க பின்னணி கொண்ட கதையில் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளன.அதனால் இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு தங்க சுரங்கங்களில் நடைப்பெறவுள்ளது