விஜய் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடிக்கவுள்ளார். தில் ராஜு இப்படத்தை தயாருக்கிறார்.தளபதி 67 படத்தை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பார் என்று தகவல் ஒன்று வெளியாகியிருந்தது.இந்நிலையில், இப்படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை என்றும் முதல் முறையாக கதாநாயகி இல்லாமல் உருவாகும் விஜய் படம் இதுவே என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            