76 ரூபாய்க்காக வீட்டை இழக்கும் விஜய் குடும்பம்!

விஜய்யின் தந்தை வீடு ரூ.76 பணத்துக்காக ஜப்தி செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த 2011ம் ஆண்டு இயக்கிய சட்டப்படி குற்றம் படத்தை விளம்பரம் செய்தவற்காக சரவணன் என்பவருடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் ஒப்பந்தப்படி விளம்பரத்திற்கான பணத்தை அவர் தரவில்லை எனக் கூறி சரவணன் என்பவர் நீதிமன்றத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு தொடுத்திருந்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பணத்தை செலுத்த உத்தரவிட்டது. இருப்பினும் பணத்தை செலுத்தாத எஸ்.ஏ.சியின் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.எஸ்.ஏ.சந்திரசேகரின் அலுவலகமாக இருக்கும் வீடு தான் விஜய் சிறு வயதில் வசித்த வீடு. விஜய் தற்போது கோடிக்கணக்கில் ஊதியம் பெறும்போது தனது தந்தையின் வீடு ஜப்தி செய்யப்படுவதை அமைதியாக பார்த்துக்கொண்டிருப்பது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.