விஜய்,அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மோதல்!

விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி மோதிக்கொள்வதும், பிறகு அமைதியாகி விடுவதும் வழக்கம். சில மாதங்களாக ரசிகர்களின் மோதல்கள் இல்லாமல் இருந்தது. தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் சமூக வலைத்தளத்தில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே மோதலாக மாறி வருகிறது.விஜய் ரசிகர்கள் #AIDS_PATIENT_AJITH என்ற ஹேஷ்டேக்கில் அஜித் புகைப்படங்களை கேவலமாக சித்தரித்தும், அஜித் ரசிகர்கள் #RIPJOSEPHVIJAY என்ற ஹேஷ்டேக்கில் விஜய்யின் புகைப்படங்களை சித்தரித்தும், வெளியிட்டு வருகிறார்கள். மேலும் இருவரின் கண்ணீர் அஞ்சலி புகைப்படங்களை உருவாக்கி பதிவு செய்து வருகிறார்கள்.