அஜித்தின் 62வது படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்!

‘வலிமை’ படத்துக்கு பிறகு நடிகர் அஜித் குமார் தற்போது வினோத் இயக்கத்தில் ‘ஏகே 61’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.ஏகே 61 படத்துக்காக நடிகர் அஜித்தின் தோற்றப் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவிருப்பதாகவும் அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் பரவியது. இதனை தற்போது லைக்கா நிறுவனம் உறுதி செய்துள்ளது.இதுதொடர்பாக லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”நடிகர் அஜித் குமாரின் ஏகே 62 படத்தை நாங்கள் தயாரிக்கவிருப்பதையும், விக்னேஷ் சிவன் இயக்கவிருப்பதையும், அனிருத் இசையமைக்கவிருப்பதையும் பெருமையுடன் அறிவிக்கிறோம். இந்தப் படத்துக்கு ஜி.கே.எம்.தமிழ் குமரன் தலைமை தாங்குவார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கி, அடுத்த ஆண்டு வெளியாகும். இந்தப் படத்தின் பிற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்று குறிப்பிட்டுள்ளது.