4 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ வைரல்; - சந்தேக நபர் தலைமறைவு


4 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பதவிய, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரே குழந்தையை கொடூரமாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நபர் சிறுவனை கொடூரமாக தாக்குவதை அயல் வீட்டவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
 
அதற்கமைய, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்வதற்காக அவரது வீட்டை சுற்றிவளைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.


எவ்வாறாயினும், சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் குகுல் சமிந்த அல்லது பிபிலே சமிந்த என அழைக்கப்படும் நபர் சிறுவனை கொடூரமாக தாக்கிய பின்னர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸாருக்கு அல்லது சம்பதனுவர பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.