ஒவ்வொரு வருடமும் கோடி கோடியாய் பணத்தை பெற்றுள்ள மஹிந்த, கோட்டா,மைத்திரி : முழு விபரம் வெளியானது

2021 முதல் 2025 வரை ஓய்வு பெற்ற ஜனாதிபதிகள் மற்றும் விதவை மனைவிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள செலவுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள.

அதில் 2021 ஆம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்காக 4,166,033 ரூபாயும், மஹிந்த ராஜபக்ஷவிற்காக 16,758,834 ரூபாயும், மைத்திரிபால சிறிசேனவிற்காக 14,953,872 ரூபாயும் பிரேமதாசவின் மனைவிக்காக 2,491,245 ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேபோல், 2022 ஆம் ஆண்டில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு 42,764,859 (4 கோடியே 27 இலட்சத்து 64 ஆயிரத்து 859 ரூபாவும்) மைத்திரிபால சிறிசேனவுக்கு 18,899,219 (ஒரு கோடியே 88 இலட்சத்து 99 ஆயிரத்து 219 ரூபாவும்,0 கோட்டபாய ராஜபக்ஷவுக்கு 67,911,947 ( 6 கோடியே 79 இலட்சத்து 11 ஆயிரத்து 947 ரூபாவும் )செலவிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் அவர்களுக்கு முறையே 18,065,972 ரூபாவும், 28,120,012 ரூபாவும் 22,565,519 ரூபாவும்18,970,029 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.

இதேபோல், 2024 ஆம் ஆண்டில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு 61,664,936 ரூபாவும், மைத்ரிபால சிறிசேனவுக்கு 18,569,418 ரூபாவும், ரணில் விக்ரமசிங்கவிற்காக 2,530,457 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.

அதேநேரம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை செலவிடப்பட்டுள்ள தொகை முறையே 5,999,308 ரூபாயும், (59 இலட்சத்து 99 ஆயிரத்து 308 ரூபா)   4,906,833 ரூபாயும் (49 இலட்சத்து 6833 ரூபா)  15,981,862 ரூபாயும் (ஒரு கோடியே 59 இலட்சத்து 81 ஆயிரத்து 862 ரூபா) ஆகும்.

இதற்கிடையில், பிரதமர் அலுவலகம் 2021 முதல் 2023 வரை, கொழும்பு விஜேராமாவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தைப் புதுப்பிப்பதற்காக 47 கோடியே, இருபத்தைந்து இலட்சத்து, இருபத்தொன்பதாயிரத்து எழுபத்து மூன்று ரூபாயைச் செலவிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தைப் புதுப்பிக்க ஜனாதிபதி அலுவலகம் மேற்கொண்ட செலவு 37,651,165 (3கோடியே 76 இலட்சத்து 51 ஆயிரத்து 165 ரூபா) ரூபாவாகும்.

அதன்படி, அந்தக் காலகட்டத்தில் மட்டும் முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தைப் புதுப்பிக்க ஏற்பட்ட மொத்த செலவு (51கோடியே 90 ஆயிரத்து 237 ரூபா)  510,090,237 ரூபாய் என்று தெரிவிக்கப்படுகிறது.