வாகனம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சியான தகவல்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல்  இலங்கைக்கான வாகன இறக்குமதி ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (ranjith siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

அந்த அனுமதி பல கட்டங்களின் கீழ் வழங்கப்படும், அதன்படி ஒக்டோபர் மாதம் முதல் தொழிற்சாலைகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான இறக்குமதி தொடங்கப்படும். பின்னர், இரண்டாம் கட்டமாக முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

மூன்றாவது கட்டமாக, குறிப்பிட்ட வரம்பில் சிறிய கார்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும், நான்காம் கட்டமாக, அதாவது 2025ம் ஆண்டில் சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிப்பது அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை புத்தம் புதிய வாகனங்கள் அல்லது இரண்டு வருடங்கள் பழமையான வாகனங்களே இறக்குமதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.