விருதுகளை குவித்த வளர்ப்பிறை குறும்படம்

தமிழில் முன்னணி இயக்குனர்களாக உள்ள கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட பலர் குறும்படங்கள் மூலம் பிரபலம் ஆனார்கள்.சமீப காலமாக வெள்ளித்திரையில் சினிமா எடுப்பதற்கு முன் பயிற்சி பட்டறையாக இருந்து வருகிறது 15 நிமிட குறும்பட சினிமாக்கள். அந்த வகையில் சமீபத்தில் வளர்பிறை  என்ற குறும்படம் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான நிறைய விருதுக்களையும் வாங்கி குவித்துள்ளது.இந்த வளர் பிறை குறும்படத்தை திரைப்பட விழாக்களில் பார்த்த ஒரு அமெரிக்கர் அந்த குறும்படத்தை தன் சொந்த யூட் டூப் சேனலுக்காக வாங்கி இருக்கிறார்.இந்த குறும்படத்தை பட குழுவை நேரில் பாராட்டி தன் சமூக வலைத்தள பக்கத்தில் குறும்பட வீடியோவை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி.ரமேஷ் நந்தன் இயக்கி உள்ள இந்த குறும்படம் பல சர்வதேச குறும்பட விழாக்களில் பங்கேற்று கிட்டத்தட்ட 18 விருதுகளை வென்றுள்ளது.