வடக்கு கிழக்கு மாகாணங்களில் கால்பதிக்கிறது அமெரிக்கா


வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ளுர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை மேலும் அதிகரிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் சோனெக் இ.சொனெக்  தெரிவித்துள்ளார்.


யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர்   ஊடகங்களை சந்தித்துக் கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்த அவர்,

 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு நாம் விஜயம் மேற்கொண்டுள்ளோம். இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளோம். இந்நிலையில், இங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியிருந்தோம்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால் தாம் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக யாழ் மக்கள் தெரிவித்தனர். இளைஞர்- யுவதிகள் வேலைவாய்ப்பு இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதையும் வெளிப்படுத்தினர்.

இவ்வாறான விடயங்களை நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம். அதற்கேற்ப பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். வடக்கு கிழக்கில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதோடு,
உள்ளுர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை அதிகரிக்க அமெரிக்கா நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது” இவ்வாறு அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் தெரிவித்துள்ளார்.