விசா கட்டணங்களை பன்மடங்கு உயர்த்திய அமெரிக்கா - வெளிவந்த விபரம்


அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்காக வழங்கப்படும் விசாக்களுக்கான கட்டணங்களை உயர்த்த அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறை பரிந்துரைத்துள்ளது.

இதன்படி எச்.1பி விசாக்களுக்கான விண்ணப்ப கட்டணம் 460 டொலர்களில் இருந்து 780 டொலர்களாக உயர்த்தப்படுகிறது.

எல்.1 விசாவுக்கு 460 டொலர்களில் இருந்து 1385 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஓ-1 விசா கட்டணம்,460 டொலர்களில் இருந்து ஆயிரத்து 55 டொலர்களாக உயர்த்தப்படுகிறது.

கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கூற 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அடுத்த சில மாதங்களில் புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வரலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இது அமெரிக்க வேலைகளை நாடும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.