அமெரிக்க ஜனாதிபதியின் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என தீர்ப்பு


அமெரிக்க ஜனாதிபதியின் மகன் ஹண்டர் பைடன் துப்பாக்கி வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

 அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன், 2018 ஆம் ஆண்டு துப்பாக்கி வாங்கிய வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி வாங்கும் போது கூட்டாட்சி படிவத்தில் போதைப் பழக்கம் குறித்து பொய் கூறியதாக வழக்குத் தொடுத்தனர்.

 போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டு வருவதாக கூறி படிவத்தில் உண்மையைச் சொன்னதாக ஹண்டர் பைடன் மறுப்பு தெரிவித்தார்.

டெலாவரில் உள்ள நீதிமன்ற ஜுரி(தரசல) 3 மணி நேர ஆலோசனைக்குப் பிறகு குற்றவாளி என தீர்ப்பளித்தது.

 தீர்ப்பைக் கேட்டு ஹண்டர் பைடன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் தனது சட்டக் குழுவினரை கட்டித் தழுவினார்.

கூட்டாட்சி பின்னணிக் கணக்காய்வில் போதைப் பழக்கம் குறித்து தவறான தகவல் அளித்தல் மற்றும் போதைப் பழக்கத்தில் இருக்கும் போது அல்லது மீண்டு வரும்போது துப்பாக்கி வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொண்டார்.
நீதிமன்றம் ஒத்தி வைக்கப்பட்ட பிறகு, நீதிமன்ற அறையை விட்டு வெளியேறும் முன்பு தனது மனைவியை முத்தமிட்டு கட்டித் தழுவினார்.

 தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக இருந்தாலும், கடந்த வாரம் மெலிசா, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்திடமிருந்து கிடைத்த அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றியுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.