பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் ஈரானிய ஜனாதிபதி உடன் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார்.
மத்திய கிழக்கில் ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான போர்ச் சூழலுக்கு மத்தியில், ஈரானிய ஜனாதிபதி Masoud Pezeshkian உடன் பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் சர்வதேச பதற்றத்தை குறைப்பது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மேலும் ஈரானிய ஜனாதிபதியுடன் நடந்த 30 நிமிட தொலைபேசி உரையாடலுக்கு பிறகு, நேற்றையதினம் பிரான்ஸ், அமெரிக்கா, மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில்,
காசாவில் போர்நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகள் விடுவிப்பு ஆகியவற்றிற்கான வாய்ப்பை பாதிக்க வேண்டாம் என ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் எந்தவொரு பதிலடியும், பிராந்தியத்தை மிகப்பெரிய போர் சூழலுக்குள் தள்ளிவிடும் என ஈரானை எச்சரித்து இரூப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அமெரிக்கத்பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின், விமானந்தாங்கிப் போர்க்கப்பல் குழுவை விரைவில் மத்திய கிழக்கு வட்டாரத்திற்குக் கொண்டுசெல்ல உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு, இத்தகவலை வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு வட்டாரத்தில் போர் மூளக்கூடும் என்ற அச்சம் நிலவும் வேளையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலின் தலைமையிலான விமானந்தாங்கிப் போர்க் கப்பல்கள் எஃப்-35 ரகப் போர் விமானங்களை ஏந்திச் செல்கின்றன.
யு.எஸ்.எஸ் ஜார்ஜியா எனும் ஏவுகணை பாய்ச்சக்கூடிய நீர்மூழ்கிக் கப்பலையும் மத்திய கிழக்குக்குக் கொண்டுசெல்ல ஆஸ்டின் உத்தரவிட்டதாகக் சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

நாசகாரிகள் உள்ளிட்ட போர்க்கப்பல் குழுவை மத்திய கிழக்குக்கு அனுப்புவதாக அமெரிக்கா கடந்த வாரம் அறிவித்தது.
இதற்கிடையே, பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்க வேண்டியதன் அவசியம், சண்டை நிறுத்தம் எட்டப்படுவது தொடர்பான முன்னேற்றம், காஸாவில் உள்ள பயணயக்கைதிகளை விடுவித்தல் போன்றவை குறித்து அமெரிக்கத் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேலியத் பாதுகாப்பு அமைச்சரிடம் கலந்துபேசியுள்ளார்.
இந்நிலையில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா தளபதி ஃபுவாட் ஷுக்ர் இருவரும் ஜூலை மாதம் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கப் போவதாக ஈரானும் ஹிஸ்புல்லா அமைப்பும் சூளுரைத்துள்ள வேளையில் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதேவேளை அமைச்சர் ஆஸ்டினின் உத்தரவு, நட்பு நாடான இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவைக் காட்டும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இதனிடையே மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், அனைத்துலக விமான நிறுவனங்கள் சில தங்களது விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன. அத்துடன், சில விமான சேவை நிறுவனங்கள் தங்கள் விமானங்கள் மத்திய கிழக்கு வான் பரப்பில் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றன.
இம்மாதம் 2ஆம் திகதியிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் விமானங்கள் ஈரானிய வான்வெளியைத் தவிர்த்து, மாற்றுப் பாதையைப் பயன்படுத்தி வருகின்றன.
இவ்வேளையில், லுஃப்தான்சா, சுவிஸ் ஏர், ஏர் பிரான்ஸ், டிரான்ஸ்ஏவியா பிரான்ஸ் போன்ற விமான நிறுவனங்கள் மத்திய கிழக்கு வட்டாரத்துக்கான விமானச் சேவைகளைத் தற்காலிகமாக ரத்து செய்வதாக நேற்று அறிவித்துள்ளன.
கிரீசின் ஏஜியன் ஏர்லைன்ஸ் நிறுவனம், பெய்ரூட், அம்மான், டெல் அவிவ் ஆகிய நகரங்களுக்கான அனைத்து விமானச் சேவைகளையும் ஆகஸ்ட் 19ஆம் திகதிவரை ரத்து செய்வதாக அறிவித்தது.
அல்ஜீரியாவின் ஏர் அல்ஜீரி நிறுவனம், லெபனானுக்கான அனைத்து விமானச் சேவைகளையும் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை நிறுத்திவைப்பதாகக் கூறியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனமும் லாட்வியாவின் ஏர்பால்டிக் நிறுவனமும் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்று திரும்பும் விமானச் சேவைகளைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்