ஈரானின் எந்தவொரு தாக்குதலிலும் இஸ்ரேலைப் பாதுகாப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதாகவும், மேலும் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகவும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி (John Kirby) தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வொயிஸ்
தாக்குதலுக்கான வாய்ப்புகளை கணிப்பது கடினம், ஆனால் வெள்ளை மாளிகை ஈரானிய அறிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
மத்திய கிழக்கில் இரண்டு விமானம் தாங்கிக் கப்பலுடன் குழுக்களையும், F-22 போர் விமானங்களின் கூடுதல் படைப்பிரிவையும் அமெரிக்கா பராமரிக்கிறது.
இஸ்ரேலைப் பாதுகாக்கவும், பிராந்தியத்தில் உள்ள எங்கள் சொந்த படையினர் மற்றும் தளங்களை பாதுகாக்கவும் நாங்கள் அவற்றை அங்கு நிலை நிறுத்தியுள்ளோம் என்றார்.
இதேவேளை 10 மாத கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், மீதமுள்ள 108 இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்பதற்கு சாத்தியமான காசா போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து அவர் கருது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் டோஹாவில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் கிர்பி நம்பிக்கை வெளியிட்டார்.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு ஈரான் கடுமையான பதிலடி கொடுக்கவுள்ளதாக தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றது.
இதனிடையே ஹிஸ்புல்லா இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி இதனை தெரிவித்துள்ளார்.