உக்ரைனில் உள்ள பிரித்தானிய பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தல்!

உக்ரைனில் உள்ள பிரித்தானிய பிரஜைகள் இப்போது நாட்டை விட்டு வெளியேறுமாறு, பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.எந்த நேரத்திலும் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுக்கலாம் என அமெரிக்கா எதிர்வு கூறியுள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் தனது சொந்த குடிமக்களை வெளியேற பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.எல்லைக்கு அருகில் 100,000 துருப்புக்களைக் குவித்த போதிலும், உக்ரைன் மீது படையெடுப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என ரஷ்யா மறுத்துள்ளது.நேற்று (வெள்ளிக்கிழமை) உலகத் தலைவர்களின் அழைப்பில் இணைந்துகொண்டதால், ஐரோப்பாவின் பாதுகாப்பு குறித்து அஞ்சுவதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் கூறினார்.எவ்வாறாயினும், கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினரும், பாதுகாப்புத் தேர்வுக் குழுவின் தலைவருமான டோபியாஸ் எல்வுட், ‘அமெரிக்காவால் பயன்படுத்தப்படும் சொல்லாட்சிகள் குறித்து கவலைகளை எழுப்பிய அவர், இது இது பீதியின் எல்லை என்று அவர் கூறினார்.நேட்டோவின் ஒரு பிரிவு பல மாதங்களுக்கு முன்பே உக்ரைனுக்கு மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.எனினும், மேற்கத்திய நாடுகள் தவறான தகவல்களை பரப்புவதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.