வரலாறு காணாத வெப்ப அலை- திறந்த வெளி நிகழ்ச்சிகளுக்கு பிரான்ஸில் தடை!

ஐரோப்பா முழுவதும் இதுவரை காணாத வெப்ப அலை வீசி வரும் நிலையில், பிரான்ஸில் ஒரு இடத்தில் திறந்த வெளி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.போர்டியாக்ஸைச் சுற்றியுள்ள ஜிரோண்டே துறையில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் பெரும் திரளாக கூடும் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், திருமணம் போன்ற தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி உண்டு.வியாழக்கிழமை மட்டும் பிரான்ஸின் சில பகுதிகளில் முந்தைய ஆண்டைவிட 40 டிகிரி அதிக வெயில் இருந்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வெப்பநிலை சனிக்கிழமை உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.புவி வெப்பமடைதலின் விளைவாக கடுமையான வெப்பம் அடிக்கடி மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் அதிக வெப்பநிலையை அனுபவித்து வருகின்றன.