ரஷ்ய படையினர் பிடித்த உக்ரைன் வீரரின் நிலை - அதிர்ச்சியளிக்கும் புகைப்படங்கள் வெளிவந்தன

ரஷ்யாவால் உக்ரைன் வீரர் சிறை கைதியாக பிடிபடுவதற்கு முன்பிருந்த நிலையும் பிடிபட்ட நிலையில் அவரின் நிலை தொடர்பான அதிர்ச்சி தரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளை தாக்கிய ரஷ்யப் படைகள், அந்நாட்டு இராணுவ வீரர்களையும் கைது செய்தன. ரஷ்யப் படைகளுக்கு உக்ரைன் நாட்டு இராணுவ வீரர்களும் முடிந்தவரை பதில் தாக்குதல் கொடுத்து வருகின்றனர்.

போரை நிறுத்தும்படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியும் அவர் போரை நிறுத்த உடன்படவில்லை.

இந்நிலையில்,கைதிகள் பரிமாற்றத்தில் ரஷ்யாவிடம் சிறைக் கைதியாக பிடிபடுவதற்கு முன் மற்றும் பின்னர் உக்ரைன் வீரர் மிக்கைலோ டையனோவ் எப்படி காணப்படுகிறார் என்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

கைதிகளான 205 பேரில் இவரும் ஒருவர். அதில், உக்ரைன் வீரரின் புகைப்படங்கள் அதிர்ச்சி தரும் வகையில் உள்ளன.

இதுபற்றி உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில்,

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சக டுவிட்டர் செய்தி

"உக்ரைன் வீரர் மிக்கைலோ டையனோவ் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்களில் ஒருவர். ரஷ்யாவின் கைதியாக பிடிபட்டவர்களில் மற்றவர்களின் நிலைக்கு மாறாக, இவர் உயிர் பிழைத்து உள்ளார்.

இதுவே, ஜெனீவா ஒப்பந்தத்தின்படி ரஷ்யா எப்படி நடந்து கொள்கிறது என்பது தெளிவாக காட்டப்பட்டு உள்ளது. வெட்கக்கேடான நாசிச மரபுகளை ரஷ்யா எப்படி தொடர்ந்து பின்பற்றி வருகிறது என்பதற்கும் இது எடுத்துக்காட்டு" என தெரிவித்து உள்ளது.