உக்ரைனிய பயங்கரவாதம் - ஐரோப்பிய நாடுகளை எச்சரித்த ரஷ்யா..!


ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பாக வாக்னர் கூலிப்படையின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

"தாக்குதலில் எட்டு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன என்றும் எதிரி ட்ரோன்கள் அனைத்தும் வீழ்த்தப்பட்டன எனவும் மொஸ்கோவில் பல கட்டிடங்களை ட்ரோன்கள் தாக்கியதில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் மஸ்கோ தலைநகரின் மேயர் கூறியுள்ளார்.

இச்சம்பவம் மூலம் கடந்தாண்டு பெப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வரும் சூழல் இல்லை என தெரிகிறது.

உலகளவில் பேசுபொருளாகிய ரஷ்யா-உக்ரைன் போர், முடிவுக்கு வராத நிலையில், அந்நாட்டு மக்கள் தீவிர பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

ரஷ்ய தலைநகர் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், உக்ரைனில் குறித்த தாக்குதலை "சிறப்பு இராணுவ நடவடிக்கை" என்று கூறியதற்காக புடின் கண்டித்துள்ளார்

“ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, ரஷ்யாவின் செச்சினியா மாகாணத்தின் தலைவரான ரம்ஜான் கதிரோவ், நாடு முழுவதும் இராணுவச் சட்டத்தை அறிவிக்கவும், உக்ரைனில் உள்ள அனைத்து வளங்களையும் "அந்த பயங்கரவாத கும்பலை அழிக்க" பயன்படுத்தவும் வலியுறுத்தினார்.

இந்த கருத்து தொடர்பில் சர்வட்ரசை ஊடகம் ஒன்று, ''உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து கதிரோவ் ஐரோப்பிய நாடுகளையும் எச்சரித்ததாகக் தெரிவித்துள்ளது.

''உக்ரைனுக்கு ஆயுதங்களை அவர்கள் தொடர்ந்து வழங்கினால், ரஷ்யாவின் தாக்குதலின் போது தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான ஆயுதங்கள் அவர்களிடம் இருக்காது.

ரஷ்ய பொதுமக்கள் தாக்குதலால் அமைதியடைய மாட்டார்கள். உக்ரைனிய பயங்கரவாதம் என்று அவர் விவரித்ததற்கு எதிராக மொஸ்கோவின் வான் பாதுகாப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது" என புடின் கூறினார்.