நோட்டோ எல்லையில் பறந்தது புடின் இருந்த விமானமா..! கிளம்பிய சர்ச்சை

உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், பாதுகாப்பாக ஆகாயத்தில் பறந்தபடி ரஷ்ய அதிபர் புடின் ஆணை பிறப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட விமானம், நேட்டோ எல்லைக்கருகே பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலந்து மற்றும் லிதுவேனியா நாடுகளின் எல்லையோரமாக அமைந்துள்ள ரஷ்ய நகரம் Kaliningrad. சமீப காலமாக, அந்த நகரத்திலிருந்து முக்கிய பிரமுகர்கள் பயணிக்கும் விமானங்கள் அடிக்கடி போக்கும் வரத்துமாக இருப்பது அதிகரித்துவருவதை கவனித்துவருவதாக நேட்டோ அமைப்பு கூறியுள்ளது.

இந்நிலையில், புடினுடைய அணு ஆயுதக் கட்டுப்பாட்டு விமானம் நேட்டோ எல்லைக்கருகே பறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட விமானம், ரஷ்யாவின் முக்கிய நபர்கள் மட்டுமே பயணிக்கும் விமானம் ஆகும். ஆகவே, அந்த விமானத்தில் ரஷ்ய தளபதிகளில் ஒருவரோ, அல்லது புடினோ கூட இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

எப்படியும், நேட்டோ எல்லைக்கருகே அந்த விமானம் பறந்ததும், நேட்டோ சார்பில் எஸ்தோனியா நாட்டில் நிறுத்தப்பட்டிருந்த பிரித்தானிய விமானப்படை விமானங்கள் அந்த ரஷ்ய விமானத்தை இடைமறித்துள்ளன.

லிதுவேனியாவில், அடுத்த வாரம், நேட்டோ அமைப்பின் தலைவர்கள் உச்சி மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக திட்டமிட்டுவரும் நிலையில், புடினுடைய விமானம் அந்தப் பகுதியில் பறந்ததையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.