அமெரிக்காவின் கைபொம்மையான வாக்னர் படை - சிஐஏயின் சதி செயல் அம்பலம்..!



ரஷ்யாவில் புடின் ஆட்சியை கவிழ்க்க வாக்னர் குழுவை வைத்து அமெரிக்காவின் சிஐஏதான் முயற்சிகளை செய்ததாக சர்வதேச அரசியல் வட்டாரத்தில் விவாதம் ஒன்று எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் ரஷ்யா - உக்ரைன் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

உக்ரைனை ராணுவ ரீதியாக பிடிப்பதை விட அந்நாட்டு அதிபரை கொலை செய்துவிட்டு, ஆட்சியை கலைத்து, அதன்பின் நாட்டை பிடிக்கும் முயற்சியில் ரஷ்ய அதிபர் புடின் இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

உக்ரைன் அதிபரும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் ரஷ்யாவின் முதல் ஸ்கெட்ச் நான்தான்.. இரண்டாவது ஸ்கெட்ச் என் குடும்பம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அவரின் இந்த பேச்சுக்கு பின் இருந்த குழுதான் வாக்னர். அதாவது இவர்கள் தனியார் ராணுவம், அல்லது காசுக்கு கொலை செய்யும் கொலைகார கும்பல். உலகில் பெரிய அரசுகள், பெரிய நபர்கள் தங்களுக்கு வேண்டாதவர்களை தீர்த்து கட்ட பயன்படுத்தும் கும்பல்தான் இவர்கள்.

உலகம் முழுக்க இப்படி பல தனியார் இராணுவம் உள்ளது. ஸ்கெட்ச் போட்டு வெளி உலகிற்கே தெரியாமல் கொல்லும் திறன் கொண்டவர்கள் இவர்கள். அப்படி ஒரு கும்பல்தான் இந்த Wagner .

2014ல் உருவாக்கப்பட்டது இந்த கும்பல். ரஷ்ய அரசுக்கு மிகவும் நெருக்கமாக பார்க்கப்படும் தனியார் இராணுவம். ரஷ்யா அரசால் நேரடியாக செய்ய முடியாததை இந்த குழு மறைமுகமாக செய்யும்.

2017 கணக்குப்படி இந்த குழுவில் மொத்தம் 6000 கொலைகாரர்கள் இருக்கிறார்கள். ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டது இந்த அமைப்பு. இன்னும் பல சின்ன சின்ன நாடுகளில் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டு உள்ளது.

ரஷ்யா அரசு மூலம் பல illegal கொலைகளுக்கு இந்த குழுதான் இயக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக லிபியா, சிரியா, மாலி, மொசாம்பி, சூடான், ஆப்ரிக்கா போன்ற போர்கள் நடக்க கூடிய நாடுகளில் எல்லாம் இந்த குழு ரஷ்யா மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தங்களுக்கு எதிராக இருக்கும் குழுக்களை அல்லது, அரசியல் தலைவர்களை கொலை செய்ய இந்த Wagner குழு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

2015 -2018 வரை சிரியாவில் ரஷ்யா மற்றும் அந்நாட்டு அதிபர் பாஷர் அல் ஆசாத் குழுவிற்கு உறுதுணையாக ராணுவ நடவடிக்கையை இவர்கள் செய்து வருகின்றனர். இவர்களின் குழுவில் இருக்கும் 6000 பேரில் எல்லோருமே ஒன்று ராணுவத்தில் இருந்தவர்கள் அல்லது உளவுப்படையில் இருந்தவர்கள்.

இந்த குழுவை உருவாக்கியது டிமிர்ட்டி உட்கின் என்பர். இவர் ரஷ்யாயாவின் ராணுவத்தில் இருந்தவர். அதன்பின் அந்நாட்டு உளவுப்படையில் இருந்தவர்.

அமெரிக்காவும் இது போன்ற தனியார் ராணுவத்தை பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக அமெரிக்கா 2007 ஈராக்கில் பிளாக்வாட்டர் என்ற தனியார் ராணுவத்தை பயன்படுத்தியது.

ஆனால் இவர்கள் ஒப்பந்தத்தை மீறி அங்கு பொதுமக்களையே சுட்டுக்கொண்டனர். அதேபோல் Wagner Group அமைப்பும் பல இடங்களில் பொது மக்களை கொன்றுள்ளது.

ஐரோப்பாவில் இவர்கள் நடத்திய நடவடிக்கை காரணமாக பலர் கொலை செய்யப்பட்டனர். இவர்களின் கிளை அமைப்பு மூன்றும் இங்கே தொடங்கப்பட்டது.

தற்போது இந்த அமைப்பை பிரிகோஜின் கட்டுப்படுத்தி வருகிறார். இவர் புடினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். அவரின் வீட்டில் சமையல்காரராக இருந்து அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவரின் நம்பிக்கையை பெற்று கடைசியில் இந்த தனியார் ராணுவத்தை நிர்வகிக்கும் பொறுப்பை புடின் வழியாக பெற்றார்.

இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் இரவு வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் தலைமை உக்ரைனில் இருந்த வாக்னர் படையினர் மாஸ்கோவை நோக்கி வந்தனர்.

ரஷ்ய ராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, வாக்னர் குழுவை ராணுவத்துடன் இணைக்க வேண்டும் என்று ரஷ்யா பாதுகாப்புத்துறை முயற்சி செய்தது போன்ற காரணங்களாலும், வாக்னர் குழுவினர் சிலரை ரஷ்ய ராணுவம் தாக்கியதால் இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று முதல்நாள் இரவு வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் தலைமை உக்ரைனில் இருந்த வாக்னர் படையினர் மாஸ்கோவை நோக்கி வந்தனர். இதனால் உள்நாட்டு போர் ஏற்படும், புடின் ஆட்சி கவிழ்க்கப்படும், பெரிய மோதல் உண்டாகும் என்றெல்லாம் கருதப்பட்டது.

ஆனால் கடைசியில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக தீர்க்க ஏற்படவே வாக்னர் குழு வந்த வழியே திரும்பி சென்றது.

அதோடு வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் பெலாரசுக்கு செல்வதாக முடிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் சிஐஏ தலையீடு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி சிஐஏதான் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜிக்கு பல பில்லியன் டொலர்களை கொடுத்து புடின் அரசை கவிழ்க்க சதி செய்ததாக கூறப்படுகிறது.

புடின் ஆட்சியை முடிக்க வேண்டும், ரஷ்யாவில் பொம்மை ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று சிஐஏ முயன்றதாக கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 6.2 பில்லியன் டாலரை கொடுத்து ஆட்சியை கவிழ்க்க சிஐஏ முயன்றதாகவும் ஆனால் அதை புடின் சிறப்பாக செயல்பட்டு முறியடித்துவிட்டதாகவும் சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.