கிழித்து எறியப்பட்ட இரு பெண்களின் ஆடைகள்! நீங்களெல்லாம் மனிதர்களா - கொதித்தெழும் பௌத்த தேரர்



தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பௌத்த தேரர் தொடர்பான காணொளியை பலர் பகிர்ந்து வருகின்றனர்.  ஒரு பெண்ணுடைய ஆடையை பலாத்காரமாக பிடுங்கி, வீசி, அதனை வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்கின்றார்கள். பிழை செய்தவர்களுக்கும், வீடியோ எடுத்தவர்களுக்கும், அதனை பகிர்பவர்களுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என தமிழ் பௌத்தரான  பொகவந்தலாவே ராகுல ஹிமி தெரிவித்துள்ளார். 

நவகமுவ பகுதியில் பௌத்த தேரர் ஒருவர் சமூக பிறழ்வான நடத்தைகளில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து  பௌத்த தேரரான ராகுல ஹிமி மேலும் குறிப்பிடுகையில், 

ஒரு பௌத்த துறவி பிழை செய்திருக்கின்றார், இரு பெண்கள் பிழை செய்திருக்கின்றனர்.அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால் அதற்கு ஒரு வழிமுறை உண்டு.  அதை விடுத்து வீடியோ எடுப்பதும், புகைப்படம் எடுப்பதும், அதனை முகநூலில் பகிர்வதும் தண்டனை அல்ல. அதனை பகிர்வதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் உண்டு.

எமக்கும், தாய் சகோதரிகள் உண்டு. அவர்களைப் போலத்தான் ஏனையோரும். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குற்றம் புரிந்துள்ளார்கள். ஆனாலும் அதனைப் பகிர வேண்டுமா. எனவே அந்த வீடியோவை பகிராதீர்கள். அது தவறு, மகா தவறு.  தர்மம் அதனைச் சொல்லவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

விருபத்துடன் ஒருவர் ஆடையை களைவதற்கும் பலாத்காரமாக இன்னொருவரின் ஆடையை களைவதற்கும் வித்தியாசம் உண்டு.  பௌத்த துறவி செய்தது தவறுதான், அனால் அதேப்போல அந்த இரு பெண்களின் ஆடையை கிழித்தெறிந்தமையும் தவறு.  அதனை கிழித்தெறிந்த நீங்களெல்லாம் மனிதனா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.