பன்னல பகுதியில் அமைந்துள்ள கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் வீட்டை வீடியோ எடுத்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களையும் மார்ச் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது.
வீட்டில் இருப்பவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பன்னல பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றபோதே மேற்படி இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைதான 21 மற்றும் 24 வயதுடைய சந்தேக நபர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.