அமெரிக்காவில் இரண்டு விமானங்கள் மோதி வீழ்ந்தன : விமானிகள் பலி (காணொளி)

அமெரிக்காவில் இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானங்களின் விமானிகளும் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ரெனோ நகரில் நடந்த தேசிய சம்பியன்ஷிப் விமான கண்காட்சியில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது.

விமான கண்காட்சியின் போது தரையிறங்க முற்பட்டவேளை இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து குறித்து அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை, பெடரல் விமான சேவை நிர்வாகம் மற்றும் உள்ளுராட்சி அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.