சீனா - மாலைத்தீவு இடையே புதிதாக இரு இராணுவ ஒப்பந்தங்கள் கைச்சாத்து

 சீனா - மாலைத்தீவு இடையே இரண்டு புதிய இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.  

இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் மாலைதீவு அண்மைக்காலமாக சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. 

அண்மையில் மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதோடு, மாலைத்தீவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்திய படையினர் உடனே நாட்டை விட்டு வெளியேறவேண்டும் எனவும் பணித்திருந்தார்.

இந்நிலையில் மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் கசான் மவுமூன், சீன அரசின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்பு அலுவலக துணை இயக்குனர் மேஜர் ஜெனரல் ஜாங் பாகுன் ஆகியோர் புதிய இராணுவ ஒப்பந்தங்களை ஒப்பந்தங்களை பரிமாறி கொண்டுள்ளனர். 

இந்த ஒப்பந்தம் மூலம் மாலைத்தீவுக்கு இலவச இராணுவ உதவிகளை வழங்க சீனா உறுதியளித்துள்ளது. 

இதேவேளை அண்மையில் சீனாவின் ஆய்வுக்கப்பல் மாலைத்தீவில் நிலை நிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.