ராஜபக்சவின் அறிவிப்பு வந்த இரு நாட்களில் அரங்கேறிய கொடூரம்! இளைஞர்களை ஒன்று திரளுமாறு அழைப்பு


இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வெற்றிவாகை சூடிக்கொண்டதாக ராஜபக்ச அறிவித்த அந்த கடைசி இரு நாட்களில் (16.05.2023 மற்றும் 17.05.2023) உயிர் காக்க அங்குமிங்கும் ஓடிய பல்லாயிரக்கணக்கான மக்களை எறிகணைகளாலும் எந்திரத் துப்பாக்கிகளாலும் குறி இலக்கு எதுவுமின்றி கைபோன போக்கில், கண்போன போக்கில் சுட்டுப் பிணமாக்கியதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

அதில் படுகாயமுற்று மருந்தின்றி துடிதுடித்து இறந்தோர் பல ஆயிரம் பேர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கூறுகையில், இது ஒருபுறம் இருக்க அறிவாற்றல் போராற்றல் அர்ப்பணிப்பு விடுதலை வேட்கை ஆகியவற்றின் உருவமாக திகழும் உலகத் தமிழர்கள் ஈழம் தனி நாடாவதற்கான புரட்சியை முன்னிலும் பல மடங்கு வேகமாக முன்னெடுக்க வேண்டிய நேரமிது.

ஈழம் தனி நாடாவதற்கான கோரிக்கையை எழுப்பும் இலட்சிய இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.