100 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த பாடல்

ஆனந்த சங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில் விஷால், ஆர்யா ,மீர்ணாளினி ரவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் எனிமி. இப்படத்தில் இடம்பெற்ற டம் டம் என்ற பாடல் கடந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றாக அமைந்தது.இப்பாடல் தற்போது 100 மில்லியன் பார்வையாளர்களை யூடிப்பில் கடந்துள்ளது.விஷால் நடித்த பாடல் ஒன்று 100 மில்லியன்  பார்வையாளர்களை  பெறுவது இதுவே முதல் முறையாகும்.இதுவரை அவர் நடித்த பல படங்களின் பாடல்கள் ஹிட் ஆனாலும் அதில் ஒரு பாடல் கூட  யூடிப்பில் 100 மில்லியன்  பார்வையாளர்களை தொட்டதில்லை. கடந்த வருடம் வெளியான வாத்தி கம்மிங் ,மாங்கல்யம், செல்லம்மா ஆகிய பாடல்கள் மட்டுமே 100 மில்லியன்  பார்வையாளர்களை தொட்டது. தற்போது எனிமி பட பாடலும்  இந்த வரிசையில் இணைந்து விட்டது.