ஜப்பானிய கரையோரத்தைத் தாக்கியுள்ள சுனாமி!

டொங்காவின் ஆழ்கடலில் பதிவான எரிமலை வெடிப்பினை அடுத்து ஏற்பட்ட சுனாமி ஜப்பானிய கரையோரத்தைத் தாக்கியுள்ளதாக ஜப்பானிய வளிமண்டல நிலையம் அறிவித்துள்ளது.தென்அமாமி மற்றும் டொக்காரா தீவுகளை அண்டிய பிரதேசங்களில் 3 மீட்டர் வரை கடல் அலைகள் உயர்ந்தமையை அடுத்து நேற்று சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.ஹொக்கைடோவில் இருந்து ஒக்கினாவோ வரையிலான கரையோர பகுதிகளில் கடல் மட்டம் 1 மீட்டருக்கு உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து கரையோர வாழ் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவித்திருந்தனர். ஆழ்கடல் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் 5.8 மெக்னிட்யூட் அளவில் பதிவானதாக அமெரிக்க புவிசரிதவியல் மையம் தெரிவித்துள்ளது.இதன் தாக்கம் பல நாடுகளில் உணரப்பட்டதாக விஞ்ஞானிகளினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.டொங்கோவில் இருந்து 2300 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நியூசிலாந்தின் வட கரையோரப்பகுதிகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கரையோரப்பகுதியை விட்டு பலர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.