புதிய சட்டத்தால் தடுமாறப்போகும் ட்ரம்ப் : இலங்கை;கு முக்கிய தருணம்

 

ஜனாதிபதி ட்ரம்பின் வரிக் கொள்கை தொடர்பில் அரசாங்கத்திடம் இன்னும் தெளிவான திட்டமொன்று இல்லை. அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கை தொடர்பான புதிய சட்டமொன்றை  கொண்டு வர அமெரிக்கா தயாராகி வருவதால் இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்  எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

 பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற சேர் பெறுமதி சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர்,
 

நமது நாட்டின் மொத்த ஏற்றுமதி 12.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் பெரும் பங்கு அதாவது 22.8 வீத ஏற்றுமதிகள் ஐக்கிய அமெரிக்காவிற்கே செல்கின்றன. இது 2911 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையாகும். இந்த ஏற்றுமதியில், ஆடைத் துறை மாத்திரம் 1885 பில்லியன் மதிப்பைக் கொண்டுள்ளன.

இது 64 வீதத்தை உள்ளடக்கியுள்ளது. இதற்கிடையில், இறப்பர் அமெரிக்க டொலர் 328 மில்லியனையும், தேங்காய் அமெரிக்க டொலர் 73 மில்லியனையும், எக்டிவேடட்
கார்பன் அமெரிக்க டொலர் 49 மில்லியனையும், தேயிலை அமெரிக்க டொலர் 48 மில்லியனையும், இரும்பு அமெரிக்க டொலர் 48 மில்லியனையும், மற்றும் இலவங்கப்பட்டை அமெரிக்க டொலர் 29 மில்லியனையும் கொண்டுள்ளதோடு, ஆடை ஏற்றுமதியில் 3840 வீதம் அமெரிக்காவிற்கே ஏற்றுமதியாகின்றன.
இந்தத் தரவுகள் குறித்து அரசாங்கத்திற்கு புரிதல் காணப்படுகின்றதா என்பதில் பிரச்சினை காணப்படுகிறது.

செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைக்கு அமெரிக்க வர்த்தகக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்தும் சந்தர்ப்பம் காணப்படுகின்றன. இந்த அதிகாரம் அமெரிக்க அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ளன.

சட்டங்களை உருவாக்குவதற்கும் வர்த்தக உடன்படிக்கைகளை அங்கீகரிப்பதற்கும் கூட அதிகாரங்கள் இவற்றுக்கு அதிகாரம் காணப்படுகின்றன.