உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு புடின் இணக்கம் என்கிறார் ட்ரம்ப்



ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புடினை சவுதி அரேபியாவில் தாம் சந்திப்பதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 
ரஷ்ய ஜனாதிபதியுடனான தொலைபேசி கலந்துரையாடலை அடுத்து அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
 
உக்ரேன் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு ரஷ்ய ஜனாதிபதி இதன்போது ஒப்புக் கொண்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
 
அதேநேரம், இரு நாட்டுத் தலைவர்களும் தங்களது நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பரஸ்பரம் அழைப்பு விடுத்துள்ளனர்.
 
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதிக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையே சுமார் ஒரு மணிநேரம் கலந்துரையாடல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.