ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில்  அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2016 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஆபாச நடிகைக்கு முறைகேடாக பணம் கொடுத்த வழக்கின் இறுதி தீர்ப்பு நியூயோர்க் நீதிமன்றத்தால் நேற்று வெளியிடப்பட்டது.
அதில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட போது  அவருக்கு, சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது சமுதாய சேவைச் செயல்பாடுகளோ வழங்கப்படவில்லை.

நியூயோர்க் நீதிபதி ஜுவான் மெர்ச்சான், ட்ரம்பின் 34 குற்றச் செயல்களுக்கு "முழுமையான விடுதலை" வழங்கினார். இதனால் அவருக்கு சிறைத் தண்டனையோ அல்லது அபராதமோ இல்லாமல் விடுதலை வழங்கப்பட்டது.

இருப்பினும், குற்றம் நீக்கப்படாத வரை, டிரம்ப் தனது குற்றவாளி பதிவுடன் பதவியேற்கும் முதல் அமெரிக்க ஜனாதிபதியாக வரலாற்றில் அடையாளம் காணப்படுவார்.