காசா மக்களின் வெளியேற்றும் ட்ரம்பின் திட்டம் பேராபத்து : ஹிஸ்புல்லா தலைவர்


காசா குடியிருப்பாளர்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டம், பாலஸ்தீனத்தையும் அதன் மக்களையும் ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆபத்தான முயற்சியாகும் என ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளர் ஷேக் நைம் காசிம் தெரிவித்துள்ளார்.

“பாலஸ்தீனம் மற்றும் காசா குறித்த ட்ரம்பின் நிலைப்பாடுகள் மிகவும் ஆபத்தானவை. அவர்கள் அரசியல் மட்டத்தில் பாலஸ்தீன நாட்டை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். "ட்ரம்பின் நிலைப்பாடுகள் பாலஸ்தீனியர்களை ஒழிப்பதற்கான ஒரு அரசியல் செயல்முறையின் தொடக்கமாகும்" என்று ஷேக் காசிம் ஞாயிற்றுக்கிழமை லெபனான் ஹிஸ்புல்லா இயக்கத்தில் மரணித்தவர்களை நினைவுகூரும் விழாவில் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.
உலகின் வேறு எந்த இடத்திற்கும் பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்வதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்," என்று அவர் கூறினார், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் அத்தகைய திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


 பாலஸ்தீன மக்களின் இடம்பெயர்வைத் தடுக்கும் எந்தவொரு முயற்சிக்கும் ஹிஸ்புல்லா ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 
"இன்று இஸ்ரேல் செய்யும் அனைத்தும் அமெரிக்காவால் இயக்கப்படுகிறது" என்று அவர் குறிப்பிட்டார். அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் ட்ரம்பின் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.