தலைவர் பிரபாகரனுக்கு முதல் முறையாக வீர வணக்க நிகழ்வை நடத்தவுள்ளதாக அண்ணன் வேலுபிள்ளை மனோகரன் அறிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு (Indian Media) வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, தலைவர் பிரபாகரனுக்கான முதல் வீரவணக்க நிகழ்வை எதிர்வரும் 18 ஆம் திகதி டென்மார்க்கில் (Denmark) நடத்தவுள்ளதாக மனோகரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தலைவர் பிரபாகரனின் பெயரில் நடக்கும் மோசடிகளை தடுக்கவும், அவரது வாழ்க்கை பிழையாக சித்தரிக்கப்படுவதை தடுக்கவும் இந்த வீர வணக்க நிகழ்வை நடத்த தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2009 ஈழப்போரின் போது தங்கள் மண்ணுக்காக தலைவர் பிரபாகரன், மனைவி மதிவதனி, பிள்ளைகள் என அனைவரும் உயிர் நீர்த்தார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.