அரசாங்கத்தின் மொத்தக் கடன் தொகை - நாட்டு மக்களுக்கு பேரிடி

அரசாங்கத்தின் மொத்தக் கடன் தொகை 25 ட்ரில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கடன் தொகை 25000 பில்லியன் ரூபா அல்லது 25 ட்ரில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடன் தொகை இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசாங்கத்தின் மொத்த கடன் தொகை 25 ட்ரில்லியன் ரூபாவை கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு கடன் தொகை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு அரசாங்கத்தின் மொத்த கடன் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.