கொழும்பில் பாதாள உலக தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்படும் இராணுவ கமாண்டோ படையின் ஓய்வுபெற்ற சார்ஜென்ட் மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய ஐரோப்பிய நாடான செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கைத்துப்பாக்கி, தோட்டக்கள் மற்றும் போதைப்பொருடன் நேற்று முன்தினம் இரவு மாலபேயில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து பல இராணுவ கமாண்டோ உடைகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
டுபாயில் உள்ள இராணுவ கமாண்டோ படையிலிருந்து தப்பிச் சென்ற ஒரு சிப்பாய் இந்த துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களை தனக்கு அனுப்பியதாக சந்தேக நபர் கூறியுள்ளார்.
அவர் பாதாள உலக தாக்குதலை நடத்த தயாராகி வருவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர் பெப்ரவரி மாதம் ஓய்வுபெற்ற இராணுவ கமாண்டோ படை உறுப்பினராவார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.