நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை? வெளியான அறிவிப்பு!

 அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (08) வழமை போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

 அரச பணியாளர்களின் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு ஆதரவாக, ஆசிரியர் மற்றும் அதிபர்கள் நாளை சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளனர். 

 எனினும் வழமை போல நாளை பாடசாலைகள் இயங்கும் என்று கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.