அஜித்தின் ஏகே 61 படத்தின் தலைப்பு!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு 3வது முறையாக நடிகர் அஜித் குமார், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் வினோத் ஆகியோரின் கூட்டணி இணைந்துள்ள படத்துக்கு தற்காலிகமாக ஏகே 61 எனப்பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் அஜித்தின் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க, ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் இன்னும் படப்பிடிப்பே முடியாமல் இருக்கிறது. இதனால் படத்தின் வெளியீடு தள்ளிப்போகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடைய நடிகர் அஜித்தும் தனது நண்பர்களுடன் பைக் பயணம் சென்று திரும்பியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.

இந்த நிலையில் ஏகே 61 படத்துக்கு தற்போது துணிவே துணை எனப் பெயரிடப்பட்டுள்ளதாம். முன்னதாக வினோத் மற்றும் அஜித்தின் படங்களுக்கு நேர்கொண்ட பார்வை, வலிமை என நம்பிக்கையளிக்கும் தமிழ் வார்த்தைகள் தலைப்புகளாக வைக்கப்பட்டிருந்தன.