யாழில் வானுடன் மோதிய முச்சக்கர வண்டி: சாரதிக்கு நேர்ந்த கதி

யாழில் (Jaffna) முச்சக்கர வண்டியினை முந்திச் செல்ல முற்பட்ட மற்றுமொரு முச்சக்கர வண்டி வேலிக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது இன்று (24) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் மருதனார் மடத்தில் இருந்து கோப்பாய் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மற்றுமொரு முச்சக்கர வண்டியை முந்த முற்பட்ட வேளை எதிரே வந்த வாகனத்துடன் மோதி வேலிக்குள் புகுந்து குடை சாய்ந்துள்ளது

சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் போக்குவரத்து கால்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.