ஜெர்மனியில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் - பதாதைகளுடன் இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்


ஜெர்மனியில் டிசுள்டோபில் bkk அமைப்புக்கு ஆதரவாக 3000 பேர் ஓன்று கூடி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது ஜெர்மனியின் டிசுள்டொப் நகரத்தில் ஏப்ரல் 15 ஆம் திகதி நடைபெற்றது.

அதாவது துருக்கி நாட்டினுடைய bkk என்று சொல்லப்படுகின்ற போராளி அமைப்பினுடைய தலைவர் அப்துலா கடந்த 20 வருடங்ளுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் துருக்கியின் ஸ்பீர் என்று சொல்லப்படுகின்ற மிகவும் பாதுகாப்பான சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தற்பொழுது இவரது சுகாதாரம் மற்றும் உடல் நல பாதுகாப்புக்கு அளிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

மேலும், இவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் 3000 பேர் வரை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.